உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வரும் 19, 26 ஆகிய நாட்களில்சிறப்பு மண் பரிசோதனை முகாம்

வரும் 19, 26 ஆகிய நாட்களில்சிறப்பு மண் பரிசோதனை முகாம்

வரும் 19, 26 ஆகிய நாட்களில்சிறப்பு மண் பரிசோதனை முகாம்நாமக்கல்:வரும் 19, 26 ஆகிய நாட்களில், சிறப்பு மண்பரிசோதனை முகாம் நடக்கிறது.இது குறித்து, நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள அறிக்கை: திருச்செங்கோட்டை தலைமையிடமாக கொண்டு, வேளாண் துறையின் கீழ் இயங்கி வரும் நடமாடும் மண் பரிசோதனை நிலைய வாகனம் மூலம், கிராமங்களுக்கு நேரடியாக சென்று விவசாயிகளிடமிருந்து மண் மற்றும் நீர் மாதிரிகளை பெற்று ஆய்வு செய்து, மண் வள அட்டை அன்றைய தினமே வழங்கப்பட்டு வருகிறது.வரும் 19 காலை, 9:00 மணிக்கு பள்ளிபாளையம் அடுத்த ஓடப்பள்ளி அக்ரஹாரத்திலும், 26ம் தேதி நாமகிரிப்பேட்டை அடுத்த மங்களாபுரத்திலும் முகாம் நடைபெறுகிறது. மேலும், விவசாயிகள் மண் மாதிரிகள், நீர் மாதிரிகளை நேரடியாக மண்பரிசோதனை நிலையம், வசந்தபுரம், நாமக்கல் மற்றும் நடமாடும் மண்பரிசோதனை நிலையம் நாராயணம்பாளையம், திருச்செங்கோட்டிலும் வழங்கி ஆய்வு செய்து, மண்வள அட்டை பெற்று பயனடையலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை