திருச்செங்கோடு நகராட்சியில் வரி கட்டாத7 கடைக்கு சீல்
திருச்செங்கோடு நகராட்சியில் வரி கட்டாத7 கடைக்கு 'சீல்'திருச்செங்கோடு:திருச்செங்கோடு நகராட்சியில் செயல்படும் தொழில் நிறுவனங்கள், தொழில் வரி கட்ட வேண்டும்; அரசு உத்தரவுப்படி தொழில் உரிமம் பெற வேண்டும் என, அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் நகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்து எச்சரித்து வந்தனர். ஆனால், பல ஆண்டுகளாகியும் தொழில் வரி கட்டாத, தொழில் உரிமம் பெறாத கடைகளுக்கு நகராட்சி சார்பில், 20 நாட்களுக்கு முன் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதற்கு பின்னும் தொழில்வரி கட்டாத, தொழில் உரிமம் பெறாத கடைகள், ஹோட்டல்கள், என ஏழு கடைகளுக்கு, நேற்று நகர் நல அலுவலர் வெங்கடாசலம் தலைமையில் நகராட்சி அதிகாரிகள், 'சீல்' வைத்தனர்.