மேலும் செய்திகள்
ஒருவருக்கு குண்டாஸ்
28-Jan-2025
ஆயக்காட்டூரில் ரூ.81.58 கோடியில்520 குடியிருப்பு கட்ட பூமி பூஜைபள்ளிப்பாளையம்;பள்ளிப்பாளையம் அருகே, ஆலாம்பாளையம் டவுன் பஞ்சாயத்துக்குட்பட்ட ஆயக்காட்டூர் பகுதியில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையின், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், 81.58 கோடி ரூபாயில், 520 அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அடிக்கல் நாட்டு விழா, நேற்று நடந்தது. முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினர். இதையடுத்து, அமைச்சர் மதிவேந்தன், நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் மதுரா செந்தில் ஆகியோர் அடுக்குமாடி குடியிருப்பு பணிகளை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து, அமைச்சர் மதிவேந்தன் பேசுகையில், ''காவிரி கரையோர பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிடும் வகையில், பள்ளிப்பாளையத்தில், 520 அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணிக்கு முதல்வர் அடிக்கல் நாட்டியுள்ளார். ஒவ்வொரு குடியிருப்பும், ஒரு பல்நோக்கு அறை, ஒரு சமையலறை, ஒரு படுக்கையறை, ஒரு கழிவறை மற்றும் ஒரு குளியலறை உடன் கட்டப்படுகிறது. ஒவ்வொரு குடியிருப்பும், 394 சதுர அடி கொண்டதாகும். இவ்வாறு பேசினார்.திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., சுகந்தி, நாமக்கல் கோட்டம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக பொறியாளர் குமாரதுரை, உதவி நிர்வாக பொறியாளர் செந்தில்குமார், உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
28-Jan-2025