உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கூட்டுறவு விற்பனை சங்க தொழிலாளர்கள் கூட்டம்

கூட்டுறவு விற்பனை சங்க தொழிலாளர்கள் கூட்டம்

திருச்செங்கோடு: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்-பனை சங்க வளாகத்தில், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை சங்க தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க பொதுக்குழு கூட்டம் மற்றும் ஊதிய உயர்வு ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. பேரவை செயலாளர் பொன்ராம் தலைமை வகித்தார். விற்பனை சங்க தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க தலைவர் பாலசுப்ரமணியம், பொதுச்செயலாளர் தணிகாசலம் ஆகியோர் முன்னிலை வகித்-தனர்.தொடர்ந்து, சங்க வளாகத்தில் தொழிற்சங்க கொடியை, தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன் ஏற்றி வைத்தார். கூட்-டத்தில், கூட்டுறவு விற்பனை சங்க தொழிலாளிகளுக்கு ஓய்வூ-தியம் வழங்க ஆவன செய்ய வேண்டும். 2025ல் புதிய ஊதிய ஒப்பந்தத்தில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றினர். தி.மு.க., செயலாளர் கார்த்திகேயன், சேர்மன் நளினி சுரேஷ்பாபு உள்பட பலர் கலந்து கொணடனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !