உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அக்கரைப்பட்டிஅரசு பள்ளியில்ஆண்டு விழா

அக்கரைப்பட்டிஅரசு பள்ளியில்ஆண்டு விழா

அக்கரைப்பட்டிஅரசு பள்ளியில்ஆண்டு விழாவெண்ணந்துார்:வெண்ணந்துார் ஒன்றியத்துக்குட்பட்ட, அக்கரைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி துவங்கி, 106 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு, பள்ளியின் நுாற்றாண்டு விழா, ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமையில், விளையாட்டு ஜோதியை ஏற்றி வைத்து வெண்ணந்துார் ஒன்றிய அட்மா குழு தலைவர் துரைசாமி துவக்கி வைத்தார். விழாவில், முன்னாள் ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது. பருவத் தேர்வில் முதலிடம் பெற்றவர்களுக்கு, ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் பரிசு வழங்கினர். ஆசிரியர்கள் மாணவ, மாணவியர், பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை