மேலும் செய்திகள்
உலக தண்ணீர் தினம் கிராமசபை கூட்டம்
14-Mar-2025
உலக தண்ணீர் தினம்கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் யூனியன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட, கருப்பத்துார் பஞ்சாயத்து வேங்காம்பட்டி பஞ்சாயத்து அலுவலக வளாகம் முன், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.மழை நீரை சேகரித்தல், சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்தல், உடைந்த குழாய்களை சரி செய்து நீர் வீணாகாமல் பாதுகாத்தல், மறுசுழற்சிக்கு உட்படுத்துதல், நிலத்தடி நீரை செறிவூட்டுதல், நீர் துாய்மையை பாதுகாத்தல், மரம் வளர்த்தலை ஊக்குவித்தல், வீட்டுக்கொரு மரம் வளர்த்தல், நீர் நிலைகளில் தண்ணீர் ஆக்கிரமிப்பை அகற்றி புனரமைத்தல், நீர் நிலைகளில் உரிய கால்வாய்களை துார்வாரி புனரமைத்தல் குறித்து விளக்கப்பட்டது. பஞ்சாயத்து செயலாளர் சிதம்பரம் மற்றும் யூனியன் அலுவலர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.* இதேபோல், புனவாசிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது.
14-Mar-2025