மேலும் செய்திகள்
விளையாட்டு போட்டி
26-Mar-2025
தொடக்கப் பள்ளியில்நுாற்றாண்டு விழாகரூர்:கரூர் மாவட்டம், திருமலைநாதன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் நுாற்றாண்டு விழா நடந்தது.மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் முருகேசன் தலைமை வகித்தார். கிருஷ்ணா ரெட்டியூர், ஓந்தாம்பட்டி, முத்தக்காபட்டி, வேலாயுதம்பாளையம் ஊர்களை சேர்ந்த மக்கள் திரளாக கலந்து கொண்டனர். அதில், 80 வயதுக்கு மேற்பட்ட முன்னாள் மாணவர்களும் பங்கேற்றனர். அவர்களுக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், வட்டார கல்வி அலுவலர்கள் கவுரி, சகுந்தலா, தலைமை ஆசிரியர் ராஜமாணிக்கம், வட்டார வளமைய மேற்பார்வையாளர் செல்வகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
26-Mar-2025