நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு
திருச்செங்கோடு:திருச்செங்கோடு நகராட்சி கமிஷனராக பணிபுரிந்து வந்த வாசுதேவன், திருப்பூர் மாநகராட்சி உதவி கமிஷனராக மாற்றப்பட்டார். திருப்பூர் மாநகராட்சியின் உதவி கமிஷனராக பணிபுரிந்த குமரன், திருச்செங்கோடு நகராட்சியின் புதிய கமிஷனராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.