உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வெறிநாய் கடித்து 2 ஆடுகள் பலி: விவசாயி கண்ணீர்

வெறிநாய் கடித்து 2 ஆடுகள் பலி: விவசாயி கண்ணீர்

வெறிநாய் கடித்து 2 ஆடுகள் பலி: விவசாயி கண்ணீர்நாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை, நாரைக்கிணறு அருகே மாட்டுக்காரன் கோவில் பகுதியை சேர்ந்தவர் செல்வி, 40; விவசாயி. இவர், 20க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, விவசாய தோட்டத்தில் உள்ள கட்டு தரையில் மாடு, ஆடுகளை கட்டி வைத்திருந்தார். நள்ளிரவு, திடீரென ஆடு, மாடுகளின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதையறிந்த செல்வி, ஓடி வந்து பார்த்துள்ளார். அப்போது, ஓநாய்கள் போல் இருந்த விலங்குகள் ஆடுகளை கடித்து குதறுவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.உடனடியாக, அருகே கிடந்த கற்களை எடுத்து வீசியுள்ளார். பயத்தில் மர்ம விலங்குகள் காட்டுக்குள் ஓடி மறைந்தன. பின், செல்வி சென்று பார்த்தபோது, இரண்டு ஆடுகள் உயிரிழந்து கிடந்தன. மற்ற ஆடுகள் ரத்த காயங்களுடன் உயிர் தப்பின. இதுகுறித்து, செல்வி, முள்ளுக்குறிச்சி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். அங்கு சென்ற வனவர் சுகுமார், வனப்பாதுகாவலர் கனகராஜ் மற்றும் கால்நடை மருத்துவர்கள், உயிரிழந்த ஆடுகளின் காயங்களை பரிசோதனை செய்தனர். பின், வெறி நாய்கள் கடித்து இறந்திருக்கலாம் என, தெரிவித்தனர். இரண்டு ஆடுகள் இறந்ததால், விவசாயி செல்வி கண்ணீர் வடித்தார்.****************


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை