உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது சரக்கு வாகனம் மோதி டிரைவர் பலி

சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது சரக்கு வாகனம் மோதி டிரைவர் பலி

வெண்ணந்துார்: வெண்ணந்துார் அருகே, பழுதாகி சாலையில் நின்ற லாரி மீது சரக்கு வாகனம் மோதியதில் டிரைவர் பலியானார்.திருச்சி, சத்திரம் பகுதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி, 37; சரக்கு வாகன டிரைவர். அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் மகன் கதிர்வேல், 22, அல்லி முத்து மகன் நாகேந்திரன், 23, கோபால் மகன் விக்னேஷ்வரன், 34, ராஜேந்திரன் மகன் மதன்குமார், 24, ராஜா மகன் நவீன் குமார், 27; ஆறு பேரும் பெங்களூருக்கு சமையல் வேலைக்கு சென்றனர்.வேலை முடிந்து சரக்கு வாகனத்தில் திருச்சிக்கு நேற்று முன்-தினம் இரவு புறப்பட்டனர்.நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு, மசக்காளிப்பட்டி அருகே சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை, ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது செங்கல் லோடுடன் பழுதாகி சாலையில் நின்ற லாரியின் பின்-புறம் சரக்கு வாகனம் மோதியது.இதில் பலத்த காயமடைந்த ஆறு பேரையும் அருகிலிருந்த-வர்கள் மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தட்சிணாமூர்த்தி உயிரிழந்தார். மற்ற ஐந்து பேரும், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்-கப்பட்டனர். இதுகுறித்து வெண்ணந்துார் போலீசார் விசாரிக்கின்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ