உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு முகாம்

மின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு முகாம்

ராசிபுரம்: ராசிபுரம், தமிழ்நாடு மின்சார வாரிய இயக்கமும், பராமரிப்பும் செயற்பொறியாளர் சபாநாயகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:தமிழ்நாடு மின்பகிர்மான கழகம், ராசிபுரம் கோட்டம் சார்பில் நாளை காலை, 11:00 மணி முதல், மதியம், 1:00 மணி வரை பொதுமக்களுக்கு மின் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம், கிருஷ்-ணமஹால் திருமண மண்டபத்தில் நடக்க உள்ளது. கரூர் மண்-டல தலைமை பொறியாளர் சிறப்புரையாற்றுகிறார்.மேலும், இந்த கூட்டத்தில் பொறியாளர்கள், களப்பணியா-ளர்கள் கலந்துகொண்டு மின் பாதுகாப்பு குறித்து பேச உள்ளனர்.மழைக்காலத்தில் மின் கம்பிகளை பயன்படுத்தும் விதம், வணிக நிறுவனங்களில் முன் எச்சரிக்கை பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் பேசுகின்றனர். எனவே மின் நுகர்வோர்கள், வணிக வளாக கட்டட ஒப்பந்ததாரர்கள், மருத்துவமனை பணியாளர்கள், வணிக வளாக கட்டட பராமரிப்பு மற்றும் தொழிற்சாலை பணி-யாளர்கள் உள்ளிட்ட அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறலாம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை