உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தாபாக்களில் சோதனை

தாபாக்களில் சோதனை

தாபாக்களில் சோதனைகுமாரபாளையம்:குமாரபாளையம் பகுதியில் உள்ள தாபாக்களில், உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் அருண் தலைமையிலான அலுவலர்கள், நேற்றிரவு சோதனை மேற்கொண்டனர். அப்போது, குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சமைக்கப்பட்ட உணவு வகைகளை பறிமுதல் செய்து, கொட்டி அழித்தனர்.மேலும், சுகாதாரமற்ற முறையில் செயல்படும் தாபாக்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, அச்சிடாத உணவுப்பொருள் பாக்கெட்டுகள், 20 கிலோ, பிளாஸ்டிக் கவர், ஐந்து கிலோ பறிமுதல் செய்து, 12,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை