உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 3 நாட்கள் நடந்த பொங்கல் போட்டியில் பரிசளிப்பு விழா

3 நாட்கள் நடந்த பொங்கல் போட்டியில் பரிசளிப்பு விழா

3 நாட்கள் நடந்த பொங்கல் போட்டியில் பரிசளிப்பு விழாராசிபுரம், :ராசிபுரம் அடுத்த பட்டணம் டவுன் பஞ்.,ல் பார்க்கவன் கைப்பந்து குழு சார்பில், 44ம் ஆண்டாக பொங்கல் விளையாட்டு போட்டி நடந்தது. நிகழ்ச்சியில், பெண்களுக்கான ஓட்டப்பந்தயம், கோலப்போட்டி, கயிறு இழுத்தல்; அதேபோல ஆண்களுக்கான கயிறு இழுத்தல், கபடி போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. பொங்கலன்று தொடங்கி, 3 நாட்கள் போட்டிகள் நடந்தன. போட்டிகள் முடிந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு பரிசளிப்பு விழா நடந்தது.பட்டணம் டவுன் பஞ்., துணைத்தலைவர் பொன்நல்லதம்பி முன்னிலை வகித்தார். இதில் பட்டணம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் பரிசுகளை பெற்றுச்சென்றனர். முக்கியமாக பொங்கல் போட்டியில் ஆண்களை விட, பெண்களே அதிகம் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ