50 சதவீத மானியத்தில் மாடி தோட்டம் ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு
நாமக்கல், ஆக. 29-'மாடி தோட்டம் மற்றும் பழச்செடி தொகுப்புகள், 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது. தேவைப்படும் பயனாளிகள் இணைய வழியில் முன்பதிவு செய்து பயன்பெறலாம்' என, நாமக்கல் தோட்டக்கலை உதவி இயக்குனர் கார்த்திக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் வட்டாரத்தில், தோட்டக்கலை துறையில், மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், மாடித்தோட்ட தொகுப்புகள் மற்றும் பழச்செடி தொகுப்புகள், 50 சதவீதம் மானிய விலையில் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகள், இணையதளத்தில் பதிவு செய்வது அவசியம். அதனால், பயனாளிகள், http://tnhorticulture.tn.gov.in/kit என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். முதலில் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.இணையவழியில் பதிவு செய்ய முடியாத விவசாயிகள், வட்டார தோட்டக்கலை அலுவலகத்தை அணுகலாம். மேலும், தென்னங்கன்று, 65 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு விவசாயி எவ்வளவு தென்னங்கன்று வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.