மூட்டை துாக்க வந்த வடமாநில தொழிலாளர்களால் வாக்குவாதம்
பள்ளிப்பாளையம்: அரிசி மண்டியில் மூட்டை துாக்க வந்த வடமாநில தொழிலாளர்களை, உள்ளூர் தொழிலாளர்கள் தடுத்ததால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.பள்ளிப்பாளையம், ஆர்.எஸ்., சாலையில் செயல்பட்டு வரும் ஒரு அரிசி மண்டியில், வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள், நேற்று முன்தினம் இரவு சிலர் அரிசி மூட்டை ஏற்ற வந்தனர். இதையறிந்த பள்ளிப்பாளையத்தை சேர்ந்த சுமை துாக்கும் தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், வடமாநில தொழிலாளர்களுக்கும், சுமை துாக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வடமாநில தொழிலாளர்களுக்கு ஆதரவாக அரிசி மண்டி உரிமையாளரும் சுமை துாக்கும் தொழிலாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த பள்ளிப்பாளையம் போலீசார், இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.