மேலும் செய்திகள்
அரளி பூக்கள் விலை உயர்வு
07-Sep-2024
ரஸ்தாளி வாழை ரூ.350க்கு விற்பனை
19-Aug-2024
வாழைத்தார் விலை உயர்வுப.வேலுார், செப். 17-ப.வேலுார் தாலுகா பாண்டமங்கலம், பொத்தனுார், நன்செய் இடையாறு, குப்பிச்சிபாளையம், மோகனுார், ப.வேலுார், அண்ணா நகர், பிலிக்கல்பாளையம், ஆனங்கூர், ஜேடர்பாளையம், கொத்தமங்கலம், சிறுநல்லிக்கோவில், அய்யம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், விவசாயிகள் வாழை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இங்கு, பூவன், பச்சைநாடன், கற்பூரவல்லி, ரஸ்தாளி, மொந்தன் உள்ளிட்ட வகையான வாழைகளை பயிரிட்டுள்ளனர். விளைந்த வாழைத்தார்களை வெட்டி, ப.வேலுாரில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். அதன்படி, நேற்று நடந்த ஏலத்தில், கடந்த வாரம், 400 ரூபாய்க்கு விற்ற பூவன் வாழைத்தார், 600 ரூபாய்க்கும், 300 ரூபாய்க்கு விற்ற ரஸ்தாளி, 500 ரூபாய்க்கும், 350 ரூபாய்க்கு விற்ற கற்பூரவல்லி, 550 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை உயர்வால், வாழை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
07-Sep-2024
19-Aug-2024