மேலும் செய்திகள்
குளம் துார்வாரும் பணி துவக்கம்
11-Aug-2024
ராசிபுரம்: டேப் சரியாக மூடாததால், தொட்டியில் இருந்து குடிநீர் வீணாகி வெளியேறுகிறது.ராசிபுரம் அடுத்த புதுச்சத்திரம் ஒன்றியம் பாச்சல் கிராமத்தில், 200க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்-களின் குடிநீர் தேவைக்காக, பெரிய மேல்நிலைத்தொட்டி கட்டப்பட்டுள்ளது.இதில் உள்ளூர் நீர் ஆதாரங்கள் மூலம் தண்ணீர் வழங்கப்படுகி-றது. தொட்டியில் ஆறுக்கும் மேற்பட்ட பைப்புகள் பதிக்கப்பட்-டுள்ளன. இதில் இருந்து தண்ணீர் பிடிக்க முடியும். பைப்பில் பொருத்தப்பட்டுள்ள டேப்புகள் அடிக்கடி உடைந்து விடுகிறது. இதனால் தண்ணீர் வீணாக கீழே சென்று விடுகிறது. சரியாக மூட முடியாததால், தண்ணீர் விரைவில் காலியாகி விடுகி-றது. எனவே பைப்பில் உள்ள குழாய்களை, மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
11-Aug-2024