மேலும் செய்திகள்
அரசு பள்ளி ஆண்டு விழா
22-Feb-2025
அரசு பள்ளியில்முப்பெரும் விழாராசிபுரம்:ராசிபுரம் பராதிதாசன் சாலையில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளி தொடங்கி, 100 ஆண்டுகள் ஆனதை அடுத்து, நுாற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இத்துடன் பள்ளி ஆண்டு விழா, விளையாட்டு விழா என, முப்பெரும் விழா, நேற்று நடந்தது. தலைமை ஆசிரியர் பாரதி வரவேற்றார். பள்ளி எம்.எம்.சி., நிர்வாகி ராமசாமி தலைமை வகித்தார்.நகராட்சி சேர்மன் கவிதா, வட்டார கல்வி அலுவலர் அருள்மணி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் கார்த்திகா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சுவாமிநாதன், இஸ்ரோ விஞ்ஞானி இளங்கோ உள்ளிட்டோர் வாழ்த்தினர். முன்னதாக, நுாற்றாண்டு விழா சுடரை ஏற்றி, கல்வெட்டை பரந்தாமன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது.
22-Feb-2025