மேலும் செய்திகள்
டூவீலர் திருடியசேலம் வாலிபர் கைது
18-Feb-2025
சேந்தமங்கலம்; நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்த வெட்டுக்காட்டைச் சேர்ந்தவர் சுரேஷ், 50; சேந்தமங்கலம் ஒன்றிய ஜெ., பேரவை செயலராகவும், கூட்டுறவு வங்கி தலைவராகவும் இருந்தார். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்தார்.கடந்த, 2018 மார்ச், 20 இரவு, டூ வீலரில் சென்ற இவரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். விசாரித்த பேளுக்குறிச்சி போலீசார், முன் விரோதம் காரணமாக சுரேஷை கொலை செய்த, மலைவேப்பங்குட்டை விவசாயி விமல்குமார், 35, தெத்துக்காடு கிராமம் அரசு பஸ் டிரைவர் சிவக்குமார், 43, ஆகியோரை கைது செய்தனர். இதில், சிவக்குமார், 2019 ஜன., 25ல் இறந்து விட்டார்.நாமக்கல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சாந்தி விசாரித்து, இதில் தொடர்புடைய விமல்குமாருக்கு ஆயுள் தண்டனை, 20,500 ரூபாய் அபராதம் விதித்து நேற்று உத்தரவிட்டார்.
18-Feb-2025