மேலும் செய்திகள்
தேர்தல் நடத்தை விதிமுறை 374 துப்பாக்கி பறிமுதல்
29-Jan-2025
நாமக்கல்: வெளிமாநில மதுபான சரக்கை, கொல்லிமலைக்கு கடத்தி வந்த வழக்கில் கைது செய்யப்பட்ட, ஐந்து பேரை, குண்டாசில் கைது செய்ய, நாமக்கல் கலெக்டர் உமா உத்தரவிட்டார்.நாமக்கல் எஸ்.பி., உத்தரவுப்படி, நாமக்கல் மதுவிலக்கு அமல்பி-ரிவு கூடுதல் எஸ்.பி., தனராசு மேற்பார்வையில், மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார், சட்ட விரோதமாக மது விற்பனை செய்யும் நபர்கள் மற்றும் மதுபான கடத்தலில் ஈடுபடுவோர் மீது, கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, இந்த மாதத்தில் இதுவரை, வெளிமாநில மதுபானங்களை விற்ப-னைக்கு வைத்திருந்த குற்றம் தொடர்பாக, மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இது தொடர்பாக, 11 பேர் கைது செய்-யப்பட்டு, 517 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்-ளன. மேலும், மூன்று கார்கள், ஒரு கன்டெய்னர் லாரி, ஒரு டூவீலர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், தமிழக டாஸ்மாக் மதுபானங்களை, அரசு அனுமதியின்றி அதிக விலைக்கு விற்பனை செய்ய வைத்திருந்தது தொடர்பாக, 27 வழக்குகள் பதிவு செய்து, 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு டூவீலர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இதற்கிடையே, கடந்த, 2ல், புதுச்சேரி மாநிலம், காரைக்காலை சேர்ந்த சஞ்சீவி, 30, கார்த்திகேயன், 24, கவுதமன், 32, புயல-ரசன், 28, கொல்லிமலை வளப்பூர் நாட்டை சேர்ந்த ராஜேந்திரன், 42, ஆகியோர், வெளிமாநிலத்தில் இருந்து கொல்லிமலைக்கு மதுபான பாட்டில்களை கடத்தி வந்தபோது கைது செய்யப்பட்-டனர். இவர்கள், ஐந்து பேரையும், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, எஸ்.பி., ராஜேஸ்கண்ணன், கலெக்டருக்கு பரிந்-துரை செய்தார். அவரது பரிந்துரையை ஏற்று, கலெக்டர் உமா, ஐந்து பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தர-விட்டார். இதற்கான நகல், சேலம் சிறையில் அடைக்கப்பட்-டுள்ள அவர்களிடம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் ஒப்ப-டைத்தனர்.
29-Jan-2025