மக்கள் குறைதீர் கூட்டம் 616 மனுக்கள் அளிப்பு
நாமக்கல்,: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். இதில், பல்வேறு கோரிக்கைகள் குறித்து, 616 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றை பெற்றுக்கொண்ட கலெக்டர், உரிய அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.மேலும், கர்நாடகா மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் காட்-டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த, நாமக்கல் அடுத்த தாத்தையங்கார்பட்டியை சேர்ந்த சின்னன்னன், பாப்பிநாய்க்கன்பட்டியை சேர்ந்த சரவணன் ஆகியோரின் வாரிசு-தாரர்கள் இருவருக்கு, தனியார் கல்வி நிறுவனங்களில் பணியாற்ற ஆணை வழங்கினார். தொடர்ந்து, பழனியாண்டி என்பவர், காது கேட்கும் கருவி கேட்டு வண்ணப்பித்த உடன், 2,800 ரூபாய் மதிப்பிலான காதொலி கருவி வழங்கப்பட்டது. ஆர்.டி.ஓ., பார்த்-தீபன், தனித்துணை கலெக்டர் பிரபாகரன், அரசுத்துறை அலுவ-லர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.