மேலும் செய்திகள்
'அதிகாரி' ஆன டிரைவர்; அடங்காத லஞ்சக் கயவர்!
13-Aug-2024
நாமக்கல்: மோகனுார் தாலுகா, என்.புதுப்பட்டி, வளையப்பட்டி, அரூர் பகு-திகளில், 'சிப்காட்' தொழிற்பேட்டை அமைக்க நிலம் எடுப்ப-தற்கு வருவாய்த்துறையினர் ஆய்வு பணியை மேற்கொண்டுள்-ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 'சிப்காட்' எதிர்ப்பு இயக்கத்-தினர் பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்-றனர். இந்நிலையில், இந்த திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாய முன்-னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் தலை-மையில், மாவட்ட முதன்மை நீதிபதி திருமூர்த்தியிடம் மனு அளிக்கப்பட்டது.அந்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் பகுதியில், 'சிப்காட்' திட்டம் அமைப்பதற்காக வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும். நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். விவ-சாய நிலத்தில், எக்காரணம் கொண்டும், 'சிப்காட்' திட்டம் செயல்படுத்தக் கூடாது. மேலும், மத்திய, மாநில சுற்றுச்சூழல் அனுமதி பெறவேண்டும். தமிழகத்தில் செயல்பட்டு வரும், 32 சிப்காட் தொழிற்சாலைகளில், 11 மட்டுமே அனுமதி பெற்றுள்-ளது. சிப்காட் திட்டம் அமையும் பகுதியில், 25,000 மக்கள் வசிக்-கின்றனர். எங்கள் கோரிக்கை மனுவை, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்து, தாமாக முன் வந்து வழக்கு விசாரணை நடத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
13-Aug-2024