நாமக்கல்: நாமக்கல், சந்தைப்பேட்டைபுதுார் ஊர் பொதுமக்கள் பொதுநல அறக்கட்டளை சார்பில், ஆண்டுதோறும், பத்து மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. அந்த வகையில், நேற்று, 13ம் ஆண்டாக சந்தைப்பேட்டைபுதுார் மடத்தில் நடந்த விழாவுக்கு தலைவர் சுப்பிரமணி தலைமை வகித்தார். செயலாளர் இளங்கோ, பொருளாளர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அதில், பத்து, பிளஸ் 2 தேர்வுகளில் முதலிடம் பிடித்த யோஷ்னா, நிகிதாஸ்ரீ ஆகியோருக்கு முதல் பரிசாக, தலா, 10,000 ரூபாயும், இரண்டாமிடம் பிடித்த சிவரஞ்சினி, ரேணுஸ்ரீ, சூர்யா ஆகியோருக்கு, தலா, 7,500 ரூபாய், மூன்றாமிடம் பிடித்த வெங்கடேசன், கதிர்வேல் ஆகியோருக்கு, 5,000 ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது. அதேபோல், அரசு பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற எஸ்.பி., புதுாரில் வசிக்கும், 53 மாணவ, மாணவியருக்கு, தலா, 3,000 ரூபாய் என மொத்தம், 60 பேருக்கு, 2 லட்சத்து, 11,500 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. துணைத் தலைவர்கள் நடராஜன், சேகர், துணை செயலாளர்கள் பாபு, ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.