உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 390 கிலோ குட்கா பறிமுதல்; டிரைவர் கைது

390 கிலோ குட்கா பறிமுதல்; டிரைவர் கைது

எருமப்பட்டி: தர்மபுரி மாவட்டம், தொப்பூர் காட்டுவலசை சேர்ந்தவர் கணபதி, 26; இவர், நேற்று மாலை பெங்களூரில் இருந்து, திருச்சிக்கு, 'டாடா ஏஸி' சரக்குவேனை ஓட்டிச்சென்றார். எம்.மேட்டுப்பட்டி சோதனைச்சாவடியில் போலீசார், சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, சரக்கு வேனில், 390 கிலோ குட்கா பொருட்கள், மூட்டைகளில் கட்டி திருச்சிக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த எரு-மப்பட்டி போலீசார், குட்காவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ