செல்வம் தொழில்நுட்ப கல்லுாரியில் 15வது பட்டமளிப்பு விழா
நாமக்கல்: சேலம் சாலையில் செயல்பட்டு வரும், நாமக்கல் செல்வம் தொழில்நுட்ப கல்லுாரியில், 15வது பட்ட மளிப்பு விழா நடந்தது. செல்வம் கல்வி நிறுவனங்களின் தலைவரும், இயக்குனருமான செல்வராஜ் தலைமை வகித்தார். அறங்காவலர் ஜெயம் செல்வராஜ், துணைத்தலைவர் பாபு, செயலாளர் கவித்ரா நந்தினி, செயல் இயக்குனர் கார்த்திக், கல்லுாரி முதல்வர் ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை செயின்ட் பீட்டர்ஸ் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணைவேந்தர் மால்முருகன், 139 இளநிலை, 54 முதுநிலை பட்டங்களை, மாணவ, மாணவியருக்கு வழங்கி, பாராட்டினார். தொடர்ந்து, இன்றைய நவீன உலகில், வாழ்வதற்கு வேண்டிய கற்றலின் முக்கியத்துவத்தையும், எதிர்காலத்தை வடிவமைப்பதில் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு மிகச் சிறந்தது என்பதையும் வலியுறுத்தினார். விழாவில் பல்வேறு துறை தலைவர்கள், கல்வி ஒருங்கிணைப்பாளர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர், பெற்றோர் கலந்துகொண்டனர்.