மேலும் செய்திகள்
ஹோலி ஏஞ்சல் பள்ளியில் ஆசிரியர் தின விழா
05-Sep-2025
ப.வேலுார், ப.வேலுார் தினசரி வாழைத்தார் மார்க்கெட்டில், 17 சீப்புகளை கொண்ட, 5 அடி உயர வாழைத்தார் விற்பனைக்கு வந்திருந்ததை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அருகே பொத்தனுாரை சேர்ந்தவர் பழனியப்பன், 56; இவர், ரஸ்தாளி ரக வாழை மரங்களை வளர்த்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் வாழைத்தார் போட்டுள்ளது. மற்ற வாழைத்தார்கள் எட்டு சீப்பு வரையே விளைச்சல் இருக்கும். அதிகப்படியாக பத்து சீப்புகள் விளைச்சலாகும். ஆனால் இவரது வீட்டில் வளர்ந்த ரஸ்தாலி ரக வாழைத்தார், 17 சிப்புகளை கொண்டதாக இருந்தது. மேலும், அதிகப்படியான எடை தாங்காமல் மரம் சாய்ந்ததால் அதை வெட்டி, ப.வேலுார் தினசரி வாழைச்சந்தை ஏல மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு பழனியப்பன் கொண்டு வந்தார். இதை வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
05-Sep-2025