உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தொடர் விழிப்புணர்வால் 3 ஆண்டுகளில் 172 குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்

தொடர் விழிப்புணர்வால் 3 ஆண்டுகளில் 172 குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்

நாமக்கல், டிச. 29-நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் மாவட்டத்தில், தொடர் விழிப்புணர்வு காரணமாக, 2022ல், 165 -குழந்தை திருமணங்கள் கண்டறியப்பட்டன. 2023ல், 117, நடப்பாண்டில், 74 -என, படிப்படியாக குறைந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், குழந்தை திருமணங்கள் குறித்து, 2022ல், 230 புகார் பெறப்பட்டு, 65 திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. 165 புகார்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2023ல், 171 புகாரில், 54 திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.மேலும், 114 புகார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நடப்பு, 2024ல், கடந்த நவ., வரை, 127 புகார்கள் பெறப்பட்டு, 53 திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இதில், 54 புகார்கள் மீது போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த, 3 ஆண்டுகளில், 528 புகாரில், 172 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், 333 புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.நாமக்கல் மாவட்டத்தை, 100 சதவீதம் குழந்தை திருமணம் இல்லாத மாவட்டமாக உருவாக்க பொதுமக்கள், மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை