மேலும் செய்திகள்
கஞ்சா விற்ற வாலிபர் கைது
22-Jul-2025
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை அடுத்த எலந்தகுட்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக, வெப்படை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, போலீசார் நேற்று எலந்தகுட்டை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பீஹாரை சேர்ந்த ஜிதன்தரா சவுத்ரி, 24, சிட்டுகுமார், 25, ஆகிய இரண்டு பேர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தனர். இருவரையும் கைது செய்த போலீசார், இரண்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விசாரணையில், நுாற்பாலையில் வேலை செய்துகொண்டு, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
22-Jul-2025