உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தண்ணீர் தொட்டியில் விழுந்த 2 மகன்களும் காப்பாற்ற குதித்த தாயும் நீரில் மூழ்கி பலி

தண்ணீர் தொட்டியில் விழுந்த 2 மகன்களும் காப்பாற்ற குதித்த தாயும் நீரில் மூழ்கி பலி

நாமக்கல்: நிலத்தடி நீர் தொட்டியில் விழுந்த, இரண்டு மகன்களும், காப்-பாற்ற குதித்த தாயும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.நாமக்கல் அடுத்த போதுப்பட்டியை சேர்ந்த முருகேசன், பாவாயி தம்பதியின் மகள் இந்துமதி, 28; இவரை, சின்னமணலியை சேர்ந்த ரவிக்குமார், 32, என்பவருக்கு, 2021ல் திருமணம் செய்து வைத்தனர். ரவிக்குமார், ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலை கல்-லுாரியில், கவுரவ விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். தம்ப-தியருக்கு, யாத்விக் ஆரியன், 3, நிதின் ஆதித்யா, 11 மாத குழந்தை என, இரண்டு மகன்கள் இருந்தனர்.இந்துமதி, தன் குழந்தைகளுடன், ஒரு மாதத்திற்கு முன் பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். நேற்று காலை, 11:00 மணிக்கு, யாத்விக் ஆரியன், நிதின் ஆதித்யா ஆகிய இருவரும், வீட்டுக்கு வெளியே விளை-யாடிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு திறந்து கிடந்த, 10 அடி ஆழமுள்ள நிலத்தடி நீர் தொட்டியில், 11 மாத குழந்தை நிதின் ஆதித்யா தவறி விழுந்துள்ளான். இதை பார்த்த அண்ணன் யாத்விக் ஆரியன், தம்பியை காப்பாற்ற தண்ணீர் தொட்டிக்குள் குதித்துள்ளான். இவர்கள் இருவரின் அலறல் சத்தம் கேட்டு வீட்-டுக்குள் இருந்து ஓடிவந்த இந்துமதி, குழந்தைகள் இருவரும் தண்ணீர் தொட்டிக்குள் தத்த-ளிப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.உடனே, குழந்தைகளை காப்பாற்ற தண்ணீர் தொட்டிக்குள் குதித்-துள்ளார். ஆனால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு, இரண்டு குழந்-தைகள், தாய் இந்துமதி ஆகிய மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை அக்கம் பக்கத்தில் இருந்த-வர்கள் மீட்டனர். ஏ.எஸ்.பி., ஆகாஷ்ஜோஷி, நாமக்கல் இன்ஸ்-பெக்டர் கபிலன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசா-ரணை நடத்தினர். தண்ணீர் தொட்டியில் மூழ்கி, தாய், இரண்டு மகன்கள் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி