மேலும் செய்திகள்
பைக்கில் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது
07-Sep-2025
சேலம்:காரில், 2 டன் குட்கா கடத்தி வந்த மூன்று பேரை, செவ்வாய்பேட்டை போலீசார் கைது செய்தனர்.சேலம் செவ்வாய்பேட்டை போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று களரம்பட்டி, வீரலட்சுமி பள்ளி அருகில், ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பிரீஸா காரில் வந்த மூவரை நிறுத்தி விசாரித்தபோது, முன்னுக்கு பின் முரணாக பேசினர். சந்தேகமடைந்த போலீசார், காரில் சோதனை நடத்திய போது, தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூல் லிப் உள்ளிட்ட புகையிலை பொருட்கள், 2,100 கிலோ இருந்தது தெரியவந்தது.விசாரணையில், பெங்களூருவில் இருந்து கடத்தி வந்து, சேலம் மாவட்டம் முழுவதும் வினியோகம் செய்ய வந்தது தெரியவந்தது. இதையடுத்து மேச்சேரி, எம்.காளிப்பட்டி பகுதியை சேர்ந்த சாமிநாதன், 38, ராஜஸ்தான் மாநிலம், காலுார் பகுதியை சேர்ந்த சதீஷ், 33, ராஜஸ்தான் பாகப்பரா ரோடு பகுதியை சேர்ந்த பிரவீன், 29 ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். கார் மற்றும், 2,100 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
07-Sep-2025