உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / டி.என்.பி.எஸ்.சி., போட்டி தேர்வு 2,056 தேர்வர்கள் பங்கேற்பு

டி.என்.பி.எஸ்.சி., போட்டி தேர்வு 2,056 தேர்வர்கள் பங்கேற்பு

நாமக்கல்: 'மாவட்டத்தில் நாளை நடக்கும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிக்கான டி.என்.பி.எஸ்.சி., போட்டி தேர்வில், 2,056 தேர்வர்கள் கலந்து கொள்கின்றனர்,' என, நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி தெரிவித்-துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) நடத்தும் ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகளுக்கான, கம்ப்யூட்டர் மூலமான போட்டித்தேர்வு, நாளை (நவ., 16), காலை, 9:30 முதல், பகல், 12:30 வரையும், பகல், 2:30 முதல், மாலை, 5:30 மணி வரையும், 2 பிரிவுகளாக நடக்கிறது.நாமக்கல் மாவட்டத்தில், ராசிபுரம் முத்தாயம்மாள் கலை அறிவியில் கல்லுாரியில் காலை, 329 பேர், மாலை, 329 பேர் தேர்வு எழுதுகின்றனர். முத்தாயம்மாள் இன்ஜினியரிங் கல்லுாரியில், காலை, 499, மாலை, 499 பேர், திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்., இன்ஜி., கல்லுாரியில், காலை, 200, மாலை, 200 பேர் தேர்வு எழு-துகின்றனர்.போட்டி தேர்விற்கு வரும் தேர்வர்கள் காலை, 8:00 மணிக்குள்ளும், மதியம், 1:00 மணிக்குள்ளும் தேர்வு கூடங்களுக்கு சென்றடைய வேண்டும். மேற்படி தேர்விற்கான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து விதமான முன்னேற்பாடுகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ