உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 37 டன் விதை நெல் இருப்பு

37 டன் விதை நெல் இருப்பு

பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் சுற்றுவட்டாரத்தில் மேட்டூர் கிழக்கு கரை வாய்க்கால் நீரை பயன்படுத்தி, 10,000க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி நடக்கும். ஆண்டுதோறும் ஆக.,ல் தண்ணீர் திறக்கப்பட்டு, டிச., வரை பாசனத்திற்கு வரும். இந்தாண்டு முன்கூட்டியே, கடந்த ஜூலையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து, வேளாண் துறை சார்பில், பி.பி.டி., ஐ.ஆர்., 20, வெள்ளை பொன்னி, கோ-55, உள்ளிட்ட ரகம் கொண்ட, 37 டன் விதை நெல்கள் விவசாயிகளுக்கு வழங்க இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் நெல் சாகுபடி செய்ய தயாராகி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை