உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வீரபத்திர சுவாமி கோவிலுக்கு 4 மடாதிபதிகள் இன்று வருகை

வீரபத்திர சுவாமி கோவிலுக்கு 4 மடாதிபதிகள் இன்று வருகை

நாமகிரிப்பேட்டை நாமகிரிப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு, தென்னிந்திய வீரசைவ ஜங்கம மகாஜன சங்கம் செயல்படுகிறது.இவர்களுக்கான கோவில், வீரபத்திர சுவாமி கோவிலாக இங்கு மட்டுமே அமைந்துள்ளது.இக்கோவிலில் லிங்காதாரணம் செய்வதற்காக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த, 4 மடாதிபதிகள் இன்று வருகின்றனர்.பெல்காம் மடத்தை சேர்ந்த சந்திரசேகர சிவாச்சாரியார், விஜயநகர மடத்தை சேர்ந்த மகேஸ்வர சிவாச்சாரியார், தாவண்கரே சேர்ந்த அபிநய சித்தலிங்க சிவாச்சாரியார், கர்னுாலை சேர்ந்த அஜாத சம்புலிங்க சிவாச்சாரியார் ஆகியோர் வருகின்றனர். இவர்கள் இங்குள்ள லிங்கத்திற்கு அபிஷேகம், ஆராதனை செய்து சிறப்பு பூஜை செய்யவுள்ளனர். தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை நாகராஜன் தலைமையில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !