உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாமக்கல் எஸ்.ஐ.,க்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் கைது

நாமக்கல் எஸ்.ஐ.,க்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் கைது

நாமக்கல், நாமக்கல் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., சாந்தகுமார் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு திருச்சி சாலை, துறையூர் சாலை வழியாக சேந்தமங்கலம் மேட்டுத்தெரு வழியாக சென்று கொண்டிருந்தனர்.அப்போது, பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில், எட்டு பேர் சத்தம்மிட்டபடியும், தகாத வார்த்தைகளால் திட்டியபடியும் இருந்தனர். அந்த இடத்தில், முக்கிய குற்றவாளி காசி (எ) காசிராஜன் மற்றும் உடன் 7 பேர் சத்தம் போட்டுக்கொண்டிருந்தனர். இது குறித்து கேட்டபோது, நாங்கள் அப்படித்தான் சொல்லுவோம். இது எங்கள் ஊர் என ஒருமையில் பேசியதுடன், கொலை மிரட்டல் விடுத்தனர்.இதையடுத்து, வழக்கு பதிவு செய்த போலீசார், நாமக்கல் புதுத்தெரு காசி (எ) காசிராஜன், 35, பள்ளி காலனி தெரு அட்டு (எ) அஜய் பிரபாகரன், 26, சேந்தமங்கலம் கிழக்கு ஆதிதிராவிடர தெரு ஸ்ரீதர், 35, திருச்சி சிந்தலவாடி சதீஷ்குமார், 35 ஆகிய, நான்கு பேரை கைது செய்தனர். தலைமறைவான, 4 பேரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி