உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வாகன சோதனையில் கிடுக்கி 54 பேர் லைசென்ஸ் தடை

வாகன சோதனையில் கிடுக்கி 54 பேர் லைசென்ஸ் தடை

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், தெற்கு வட்டார போக்குவரத்து அலு-வலர் முருகேசன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வா-ளர்கள் சக்திவேல், பிரபாகரன் ஆகியோர் அடங்கிய குழுவினர், மாதாந்திர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, பஸ்கள், கனரக வாகனங்கள், இலகுரக வாகனங்கள், டூவீலர், கண் கூசும் விளக்குகள் பொருத்திய வாகனங்கள் என, அனைத்து வகை வாகனங்களும் தணிக்கை செய்யப்பட்டன.தணிக்கையில், 840 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன. அதில், 242 வாகனங்களுக்கு, சோதனை அறிக்கைகள் வழங்கப்-பட்டு, ஆறு வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டன. மேலும், 54 நபர்-களுக்கு டிரைவிங், 'லைசென்ஸ்' தடை செய்யப்பட்டது. சோதனை அறிக்கைகள் வழங்கப்பட்ட, 242 வாகனங்களுக்கு, பல்வேறு குற்றங்களுக்காக, இணக்க கட்டணம், ஏழு லட்சத்து, 86,500 ரூபாய் -நிர்ணயம் செய்யப்பட்டு, 62,300 ரூபாய் வசூல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ