உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாமக்கல் மைய நுாலகத்தில் 57வது தேசிய நுாலக விழா

நாமக்கல் மைய நுாலகத்தில் 57வது தேசிய நுாலக விழா

நாமக்கல் மைய நுாலகத்தில்57வது தேசிய நுாலக விழா நாமக்கல், நவ. 22-நாமக்கல் மாவட்ட மைய நுாலகம் மற்றும் வட்டம் சார்பில், 57வது தேசிய நுாலக வார விழா மைய நுாலகத்தில் நேற்று நடைபெற்றது.மைய நுாலகர் சக்திவேல் வரவேற்றார். மாவட்ட மைய நுாலக அலுவலர் தேன்மொழி தலைமை வகித்தார். வாசகர்கள் வட்ட தலைவர் தில்லைசிவக்குமார், புதியதாக புரவலராக, பெரும் புரவலர்களாக இணைந்த, 18 கொடையாளர்களை அறிமுகப்படுத்தி பேசினார். நாமக்கல் கம்பன் கழக தலைவர் சத்தியமூர்த்தி, நாமக்கல் தமிழ்ச்சங்க தலைவர் டாக்டர் குழந்தைவேல், கூடைப்பந்துகழக தலைவர் நடராஜன் ஆகியோர் நுாலக வளர்ச்சி குறித்து பேசினர்.கிரீன் பார்க் பள்ளி இயக்குனர் குருவாயூரப்பன், மாவட்ட நுாலக அலுவலர் மாதேஸ்வரன், வாசகர் வட்ட பொருளாளர் டாக்டர் ராஜவேல், துணைத் தலைவர் கலை இளங்கோ, இரண்டாம் நிலை நுாலகர் நாகராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, நல்நுாலகர் விருது பெற்ற கனகலட்சுமிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ