உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / காதல் கலப்பு திருமணம் செய்த மகளை கடத்திய பெற்றோர் உள்பட 6 பேர் கைது

காதல் கலப்பு திருமணம் செய்த மகளை கடத்திய பெற்றோர் உள்பட 6 பேர் கைது

ஈரோடு, காதல் கலப்பு திருமணம் செய்த மகளை, காரில் கடத்திய பெற்றோர் உள்பட ஆறு பேரை, போலீசார் கைது செய்தனர்.நாமக்கல் மாவட்டம் கொக்கராயன்பேட்டை, மூர்த்தி மகன் விஜய், 22; இவர் மனைவி அர்ச்சனா, 20; வெவ்வேறு தரப்பை சேர்ந்த இருவரும் காதலித்த நிலையில் கடந்த ஜூன், 28ல் திருமணம் செய்தனர். அர்ச்சனாவின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஈரோடு கள்ளுக்கடை மேடு ஈ.வி.ஆர். வீதியில் தம்பதி வசிக்கின்றனர். அப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள பட்டு சென்டருக்கு, அர்ச்சனா வேலைக்கு செல்கிறார். விஜய் தினமும் பைக்கில் மனைவியை வேலைக்கு கொண்டு சென்று விடுவார். நேற்று காலை வழக்கம் போல் வீட்டில் இருந்து பைக்கில் மனைவியுடன் புறப்பட்டார். அப்போது பொலிரோ காரில் வந்த அர்ச்சனாவின் தந்தை செல்வம், தாய் கவிதா மற்றும் நான்கு பேர், அர்ச்சனாவை காரில் ஏற்றி கடத்தி கொண்டு சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த விஜய், சூரம்பட்டி போலீசில் புகார் செய்தார். மாவட்டங்களில் உள்ள போலீஸ் செக்போஸ்ட்டை போலீசார் உஷார்படுத்திய நிலையில், அந்தியூரை அடுத்த வரட்டுப்பள்ளம் செக்போஸ்டை கடந்து, பர்கூர்மலை வழியாக கார் செல்வது தெரிய வந்தது. அப்பகுதி போலீசாருக்கு தகவல் கொடுத்த போலீசார், மதியம் வாக்கில் காரை வளைத்துப் பிடித்தனர். அர்ச்சனாவை போலீசார் மீட்டனர்.காரில் இருந்த அர்ச்சனாவின் பெற்றோர், பவானி, ஒலகடம், தாசனுார் பழனிச்சாமி, 45; அந்தியூர், பச்சாம்பாளையம், பள்ளிபாளையம் பெரிய மாரியம்மன் கோவில் வீதி கட்டட தொழிலாளி கருமலையான், 35, கூலி தொழிலாளி சண்முகம், 46, யுவராஜ், 35, என ஆறு பேரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை