மேலும் செய்திகள்
தனியார் ஆம்புலன்ஸ்டிரைவர்களுக்கு எச்சரிக்கை
15-Dec-2024
நாமக்கல்: நாமக்கல்லில் தகுதி சான்று இல்லாமல், வரி செலுத்தாமல் இயக்-கிய, 7 ஆம்புலன்ஸ் வாகனங்களை, வட்டார போக்குவரத்து துறையினர் பறிமுதல் செய்தனர்.நாமக்கல் மாவட்டத்தில், அதிக அளவில் ஆம்புலன்ஸ் வாக-னங்கள் இயங்கி வருகின்றன. அவை ஆண்டு தோறும், புதுப்பிப்-பதுடன், முறையான ஆவணங்களை கொண்டு இயக்க வேண்டும். காரணம், விபத்தில் சிக்கும் நபர்களையும், உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளவர்களையும், மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.அதன்படி, ஆண்டு தோறும், வட்டார போக்குவரத்து துறையினர், தகுதி சான்று பெறாத, புதுப்பிக்காத வாகனங்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2024, டிச., 15 முதல், நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் உமாமகேஸ்வரி ஆகியோர் அடங்கிய குழுவினர், நாமக்கல் மாந-கராட்சிக்கு உட்பட்ட திருச்செங்கோடு சாலை, திருச்சி சாலை, மோகனுார் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு வாகன சோத-னையில் ஈடுபட்டனர்.அப்போது, ஆம்புலன்ஸ் டிரைவர்கள் லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவதும், சம்பந்தப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனத்-திற்கு தகுதி சான்று புதுப்பிக்காததும், வரி செலுத்தாததும் தெரிய-வந்தது. மேலும், உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்களை இயக்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது.அதையடுத்து, ஏழு ஆம்புலன்ஸ் வாகனங்கள் பறிமுதல் செய்யப்-பட்டு, 1.50 லட்சம் ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டது. அதேபோல், ஐந்து ஆண்டுகளாக வரி செலுத்தாமல் இயக்கிய ஜே.சி.பி., வாகனம், ஓன் போர்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
15-Dec-2024