17 வயது சிறுமி கர்ப்பம் வாலிபருக்கு போக்சோ
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் அருகே, பருத்திப்பள்ளி கிராமம், அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுமி. பிளஸ் 2 வகுப்பில் இடைநின்றார். இந்நிலையில், புதுச்சத்திரம் அருகே, நவணி கிராமத்தை சேர்ந்த, அரவிந்த், 23, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு சிறுமி கர்ப்பமானார். இதையடுத்து கர்பத்தை கலைக்க மருத்துவர் ஆலோசனையின்றி, மாத்திரை வாங்கி சாப்பிட்டுள்ளார். இதனால், சிறுமிக்கு அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டு, சேலம் அரசு மருத்துவமனையில், கடந்த, 10ல் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த எலச்சிபாளையம் போலீசார், அரவிந்தை போக்சோவில் கைது செய்தனர்.