உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அண்ணா நகரில் விபத்தை தடுக்க பேரிகார்ட் வைக்க வேண்டும்

அண்ணா நகரில் விபத்தை தடுக்க பேரிகார்ட் வைக்க வேண்டும்

பள்ளிப்பாளையம், நவ. 8-அண்ணா நகர் பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால், பேரிகார்ட் வைக்க வேண்டும்.பள்ளிப்பாளையம் அருகே, எஸ்.பி.பி., காலனி அடுத்த அண்ணா நகர் பகுதியில் வாகனங்கள் சீராக செல்ல சாலை விரிவு படுத்தப்பட்டது. இது திருச்செங்கோடு-ஈரோடு செல்லும் பிரதான சாலை என்பதால், வாகனங்கள் அதிகளவு செல்கின்றன. மேலும் அண்ணாநகர் பிரதான சாலையில் இருந்து, குடியிருப்பு பகுதிக்கும் சாலைகள் பிரிகிறது. வேகமாக வரும் வாகனங்களால், பிரிவு சாலை பகுதியில் தொடர்ந்து விபத்து நடக்கிறது. மேலும் சாலையின் ஒரு பகுதியில், பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் நடைபாதை மற்றும் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் செயல்படும் பெரும்பாலான டீக்கடைகள், வர்த்தக நிறுவனங்களுக்கு வருவோர் டூவீலர் மற்றும் காரை சாலையை ஆக்கிரமித்து நிறுத்துவதால் விரிவுபடுத்தப்பட்ட சாலை, குறுகியதாக உள்ளது.எனவே விபத்தை தடுக்க பேரிகார்ட் வைக்க வேண்டும். சாலையை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை