உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / டூவீலரில் சென்ற வெற்றிலை வியாபாரி சறுக்கி விழுந்து பலி

டூவீலரில் சென்ற வெற்றிலை வியாபாரி சறுக்கி விழுந்து பலி

குமாரபாளையம்: ஈரோடு மாவட்டம், பெருந்தலையூர் பகுதியை சேர்ந்தவர் செல்வம், 55; வெற்றிலை வியாபாரி. இவர், நேற்று முன்தினம் மதியம், 12:00 மணிக்கு, குமாரபாளையம் அருகே, சேலம் - கோவை புறவழிச்சாலையில், 'ஹீரோ டீலக்ஸ்' டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு கொட்டி வைக்கப்பட்டிருந்த மண் குவியலில் விட்டதில் சறுக்கி கீழே விழுந்தார். இதில், இரும்பு போர்டில் மோதியதில் பலத்த காயமடைந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு, குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், செல்வம் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது மகன் கண்ணன், 27, கொடுத்த புகார்படி, குமாரபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ