உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / டிரான்ஸ்பார்மரை அகற்றக்கோரி மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

டிரான்ஸ்பார்மரை அகற்றக்கோரி மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, காவிரி அடுத்த குமாரப்பன் நகர் குடியிருப்பு பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர் சேதமடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இந்த டிரான்ஸ்பார்மரால் விபரீதம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. இதனால் சில நாட்களுக்கு முன், இந்த டிரான்ஸ் பார்மரை அகற்றக்கோரி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தனர். ஆனால், இதுவரை அகற்றவில்லை.இந்நிலையில், நேற்று இரவு பெய்த மழையின் போது, டிரான்ஸ்பார்மரில் இருந்து அதிக சத்தத்துடன் தீப்பொறி வெளியேறியது. இதையடுத்து மின்தடை ஏற்பட்டது. இதனால் அச்சமடைந்த மக்கள், டிரான்ஸ்பார்மரை அகற்றக்கோரி, இரவு, 8:00 மணிக்கு மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளிப்பாளையம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ