மேலும் செய்திகள்
திறந்த வெளி கிணறுகள் சுற்றுச்சுவர் அமைக்கணும்
23-Jun-2025
வெண்ணந்துார்: வெண்ணந்துார் டவுன் பஞ்., 15-வது வார்டில், குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதியில் இருந்து நாச்சிபட்டி பகுதிக்கு செல்லும் சாலையில், தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சாலையோரம், ஏரி மேடு பகுதியில் தடுப்புச்சுவர் இல்லாத திறந்தவெளி விவசாய கிணறு உள்ளது. இந்த, சாலையில் வேகமாக செல்லும் வாகனங்கள், நிலை தடுமாறினாலோ, வாகன ஓட்டிகளின் கவனம் சிதறினாலோ, வாகனங்கள் நேராக கிணற்றுக்குள் பாய்ந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து மிகுந்த இந்த சாலையோரத்தில் காணப்படும் திறந்தவெளி கிணறுக்கு தடுப்புச்சுவர் அமைக்க வெண்ணந்துார் டவுன் பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
23-Jun-2025