சாலையில் நடந்து சென்றவர் அரிவாளால் வெட்டி கொலை
ஓசூர் :அஞ்செட்டி அருகே, சாலையில் நடந்து சென்ற கூலித்தொழிலாளி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த அக்குள் கொள்ளையை சேர்ந்தவர் மாதப்பன், 35, கூலித்தொழிலாளி. இவருக்கு முனியம்மா என்ற மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நேற்று மாலை சித்தப்பனுார் அருகே சென்ற மாதப்பனை, தொட்டமஞ்சு கொள்ளையை சேர்ந்த மாரப்பன் என்பவர் வழிமறித்து, அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடினார். அஞ்செட்டி போலீசார் சடலத்தை மீட்டனர்.மாரப்பன் மற்றும் அவரது தந்தை சித்தப்பன் ஆகியோர் மீது, ஏற்கனவே பல்வேறு கொலை வழக்குகள் உள்ள நிலையில், முன் விரோதத்தில் மாதப்பனை கொலை செய்தனரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.