உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தலைமறைவு குற்றவாளி கைது

தலைமறைவு குற்றவாளி கைது

பள்ளிப்பாளையம், ஈரோடு மாவட்டம், வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் யோகேஸ்வரன், 29; இவர், கடந்த மார்ச்சில், பள்ளிப்பாளையம் பகுதியில் வழிப்பறி செய்த வழக்கில் போலீசார் கைது செய்தனர். பின் ஜாமினில் சிறையில் இருந்து வெளியே வந்த யோகேஸ்வரன், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, பள்ளிப்பாளையம் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், பள்ளிப்பாளையம் அருகே தாஜ்நகர் பகுதியில் யோகேஸ்வரன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அங்கு சென்ற போலீசார், யோகேஸ்வரனை கைது செய்தனர். இவர் மீது நாமக்கல், ஈரோடு மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் கொலை, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது குறிப்படத்தக்கது. ஈரோடு போலீஸ் ஸ்டேஷனில், குற்றவாளி பதிவேடு பட்டியலிலும் இவர் பெயர் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி