2 டூவீலர்கள் மோதி விபத்து: ஒருவர் கைது
குமாரபாளையம், :குமாரபாளையம் ஓடக்காடு பகுதியை சேர்ந்தவர் ரத்தினவேல், 38; இவர், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, அம்மன் நகர் ஐயப்பன் கோவில் சர்வீஸ் சாலை பகுதியில், 'யமஹா கிரக்ஸ்' டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது வண்டியும், எதிரே டி.வி.எஸ்., எக்ஸல் சூப்பர் மொபட்டில் வந்த நாராயண நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி சண்முகமணி, 55, வண்டியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில், ரத்தினவேல் படுகாயமடைந்தார். அவரை மீட்டு ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து புகார்படி, விபத்துக்கு காரணமான சண்முகமணியை, குமாரபாளையம் போலீசார் கைது செய்தனர்.