மேலும் செய்திகள்
ரோட்டிலேயே இறக்கி விடப்படும் பயணிகள்
24-Feb-2025
நாமக்கல்: நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டிற்குள் செல்லும் பஸ்கள், முதலைப்பட்டி ரவுண்டானாவில் நிற்பதில்லை. இதனால், பயணிகள் அவதிப்படுகின்றனர் என, புகார் எழுந்தது. இந்நிலையில் நாமக்கல் மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி வெளியிட்ட செய்திக்குறிப்பு:நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டிற்குள் பயணிகளுக்கு தேவையான இலவச கழிப்பிடம், சைக்கிள், கார் ஸ்டாண்ட், குடிநீர், ஏ.டி.எம்., தாய்மார்கள் பாலுாட்டும் அறை, பொருட்கள் பாதுகாப்பு அறை ஆகிய வசதிகள் உள்ளன. மேலும், நகர் பகுதிக்கு செல்ல நகர பஸ் வசதியும் தேவையான அளவு உள்ளது. ஆனால், புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முதலைப்பட்டி ரவுண்டானாவில் பஸ் நிறுத்தம் உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லை. பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க ரவுண்டானாவில் பஸ்கள் நிறுத்தப்பட்டு வந்தது.இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், சாலையை அவசரமாக பயணிகள் கடப்பதால், விபத்து ஏற்படும் அபாயம் இருந்தது. இதனால், பயணிகளின் நலன் கருதி புதிய பஸ் ஸ்டாண்டிற்குள் சென்று பஸ்கள் நிற்கின்றன. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
24-Feb-2025