விபத்து நடந்த இடத்தில் ஆய்வு
வெண்ணந்துார், வெண்ணந்துார் அருகே, ஆட்டையாம்பட்டி-ராசிபுரம் நெடுஞ்சாலையில் சப்பையாபுரம் பகுதியில் கடந்த மாதம் நடந்த விபத்தில் ஒருவர் பலியானார். விபத்து குறித்து வெண்ணந்துார் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், ராசிபுரம் டிராபிக் இன்ஸ்பெக்டர் நடராஜன், விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்தார். அப்போது, எவ்வாறு விபத்து ஏற்பட்டது. விபத்து நடக்காமல் இருக்க எவ்வாறு நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.