பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் பணிகளை விரைந்து முடிக்க அறிவுரை
ராசிபுரம்: ராசிபுரத்தில் பன்னடுக்கு வாகனம் நிறுத்த கட்டுமான பணிகளை ஆய்வு செய்த கலெக்டர், குறிப்பிட்ட காலத்தில் பணியை முடிக்க அறிவுரை வழங்கினார். ராசிபுரம் நகராட்சிக்குட்பட்ட இடத்தில் நடக்கும் பல்வேறு கட்டு-மான பணிகளை கலெக்டர், நேற்று ஆய்வு செய்தார். பழைய பஸ் ஸ்டாண்டில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில், 5.86 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பன்னடுக்கு வாகன நிறுத்து-மிடம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடந்து வருகின்-றன. இப்பணிகளை கலெக்டர் உமா, நேற்று ஆய்வு செய்தார். அப்போது, பணி ஆரம்பிக்கப்பட்ட காலம், பணி முடிவடையும் காலம், நிறுத்தப்படவுள்ள வாகனங்களின் எண்ணிக்கை, அமைய உள்ள கடைகளின் எண்ணிக்கை, பொது மக்களுக்கான அடிப்-படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு விபரங்களை, நகராட்சி கமி-ஷனரிடம் கேட்டறிந்தார். நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்த காலத்-திற்குள் பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்-பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என, அலுவலர்களுக்கு அறி-வுறுத்தினார்.தொடர்ந்து, ராசிபுரம் நகராட்சி, 3வது வார்டு, கேசவன் லே-அவுட் பகுதியில், 34 லட்சம் ரூபாய் மதிப்பில் பசுமை பூங்கா அமைக்கும் பணிகளையும் ஆய்வு செய்தார். நகராட்சி கமிஷனர் கணேசன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.