மல்லசமுத்திரத்தில் வேளாண் குழு பயிற்சி
மல்லசமுத்திரம், மல்லசமுத்திரம், வண்டி நத்தம் கிராமத்தில் கிராம வேளாண் முன்னேற்ற குழு பயிற்சி நடந்தது. வேளாண்மை உதவி இயக்குனர் யுவராஜ் தலைமை வகித்து, வேளாண்மைத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், வழங்கப்படும் மானியங்கள் குறித்து விளக்கமளித்தார். மக்காச்சோளம், நிலக்கடலை, பயறுவகை பயிர்களில் உயர் விளைச்சல் பெற கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்து கூறினார். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில், வண்டிநத்தம் கிராமம் தேர்வு செய்யப்பட்டுள்ளதால், அத்திட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியங்கள் குறித்தும் விளக்கமளித்தார். பட்டுவளர்ச்சித்துறை இளநிலை ஆய்வாளர் செந்தமிழ்செல்வி, நாற்று நடவு, கொட்டகை பட்டுப்புழு வளர்ப்பு, வடங்கள் மற்றும் மானிய திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார். வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக உதவி வேளாண்மை அலுவலர் தங்கவேல் உழவர்சந்தை செயல்பாடுகள், ஒழுங்குமுறை விற்பனை கூடம், சந்தைப்படுத்துதல் போன்ற திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார்.